17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேசிய அளவிலான கராத்தே போட்டி: பதக்கம் குவித்த ராமநாதபுரம் மாணவ, மாணவிகள்..

தேசிய அளவிலான கராத்தே போட்டி: பதக்கம் குவித்த ராமநாதபுரம் மாணவ, மாணவிகள்..

எழுதியவர்: ஆசிரியர் August 19, 2023, 11:24 pm

இராமநாதபுரம், ஆக.19- 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஸ்ரீ கோட்டல விஜய பாஸ்கர ரெட்டி உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நேஷனல் கராத்தே பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் நடந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சோகாய் கராத்தே தோ பள்ளி இராமநாதபுரம் மாணவர்கள் ஷாய் பிரிவுகளில் பதக்கங்கள் வென்றனர். சென்சாய் விமலசண்முகவேல் மேற்பார்வையில் பயிலும்  ராமநாதபுரம் ஷ்ரமல் அகாதமி மாணவர்கள், உச்சிப்புளி மாணவர்கள் பதக்கங்களை வென்றனர்.  குமிதே பிரிவில் தங்கம் வென்ற மாணவி அக்ஷிதா. வெள்ளி வென்ற மாணவன் மனாஸ், வெண்கல பதக்கங்கள் வென்ற மாணவர்கள் பிரிதம்,  முவிஸ் குமார், மிர்திகா ஶ்ரீ, ஜெயஜீத், ஜாசன் ஹார்வி ஆகியோர் ராமநாதபுரம் மாவட்டம் வருவாய் சங்கத் தலைவர் பழனிக்குமாரிடம்  (கீழக்கரை வட்டாட்சியர்) வாழ்த்து பெற்றனர். சோகாய் கராத்தே தோ பள்ளி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பாக்யராஜ், துணைத் தலைவர் அழகிரி, ஷிராமல் அகாதமி நிறுவனர் தில்லை பிரகாஷ் உடன் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!