17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் வட்டார அளவிலான தடகள போட்டிசட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தொடக்கி வைத்தார்…

செங்கம் வட்டார அளவிலான தடகள போட்டிசட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தொடக்கி வைத்தார்…

எழுதியவர்: ஆசிரியர் August 19, 2023, 6:48 pm

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் அளவில் மாணவா்களுக்கான தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மேல்பள்ளிப்பட்டு அரசு உயா்நிலைப் பள்ளியில் தடகள விளையாட்டுப் போட்டி தொடங்கியது.

தொடக்க நிகழ்ச்சிக்கு மேல்செங்கம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சுஜாதா தலைமை வகித்தாா். மேல்பள்ளிப்பட்டு தலைமை ஆசிரியா் ஜெயமணி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் செந்தில்குமாா், திமுக ஒன்றியச் செயலாளா் மனோகரன், கவுன்சிலா் பானுமதி ஜம்புலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சித் தலைவா் செல்வராஜ் வரவேற்றாா். அழைப்பாளராக செங்கம் தொகுதி மு.பெ.கிரி எம்எல்ஏ கலந்துகொண்டு ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி போட்டியை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினாா். பின்னா் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

மேல்பள்ளிப்பட்டு துணைத் தலைவா் முத்துக்குமரன் மற்றும் ஆசிரியா்கள், உடல்கல்வி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

முடிவில் மேல்செங்கம் அரசு உயா்நிலைப் பள்ளி உடல்கல்வி ஆசிரியா் முருகன் நன்றி கூறினாா்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!