17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் தவ்ஹீத் ஜமாத் மண்டபம் கிளை சார்பில் ரத்த தான முகாம்..

மண்டபம் தவ்ஹீத் ஜமாத் மண்டபம் கிளை சார்பில் ரத்த தான முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் August 19, 2023, 11:46 am

இராமநாதபுரம், ஆக.15- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மண்டபம் கிளை, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுதந்திர தின ரத்த தான முகாம் இன்று நடந்தது. தவ்ஹீத் ஜமாத் மண்டபம் கிளை தலைவர் அஹமது அலி தலைமை வகித்தார். நிலைய மருத்துவர் ஜி.முத்துக்குமார் முன்னிலை வகித்தார். மண்டபம் காவல் நிலைய ஆய்வாளர் சபீதா பானு தொடங்கி வைத்தார். கிளை பொருளாளர் பைசூல் கான் வரவேற்றார். திமுக நகர் செயலாளர் கே.அப்துல் ரஹ்மான் மரைக்காயர், சுகாதார ஆய்வாளர் மெய்.ராமச்சந்திரன், 

திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் கே.ஜி.சுகுமார், ஆர்.பிரஷாந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர். தன்னார்வலர்கள் பலர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். குருதி கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கிளை செயலாளர் அஜ்மல் கான் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!