17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லை மாவட்ட காவல் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு..

நெல்லை மாவட்ட காவல் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு..

எழுதியவர்: ஆசிரியர் August 18, 2023, 3:02 pm

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் தலைமையில், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பொன். ரகு மற்றும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் நல்லிணக்க நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். “நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி ஏடுத்துக் கொள்கிறேன். மேலும், எங்களுக்கு இடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சு வார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்.” என்று உறுதிமொழி ஏற்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!