17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » போட்டோ கேலரி » செய்யது ஹமீதா கல்லூரி மாணவர்கள் “BUSINESS QUIZ” போட்டியில் சாதனை..

செய்யது ஹமீதா கல்லூரி மாணவர்கள் “BUSINESS QUIZ” போட்டியில் சாதனை..

எழுதியவர்: ஆசிரியர் January 31, 2018, 5:02 pm
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் சார்பாக கல்லூரி கலையரங்கில் 20.01.2018 அன்று மாவட்ட அளவிலான “தொழில் நெறி” வினா விடை போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்ட அளவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாமாண்டு தொழில் நிர்வாகத்துறை மாணவர் முகமது பாசித் சபில் மற்றும் முதலாமாண்டு வணிகயவில் துறை மாணவர் அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் முதல் பரிசினையும், மூன்றாமாண்டு வணிகவியல் மாணவர் பாலமாரி மற்றும் முதலாமாண்டு தொழில் நிர்வாகத்துறை மாணவர் முகமது உபய்த்ரஃப் ஆகியோர் இரண்டாம் பரிசினையும் பெற்றனர். இதன் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 23.01.2018 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் நடராசன் அவர்கள் பரிசுகள் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
​வெற்றி பெற்ற மாணவர்களை முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர் யூசுஃப் மற்றும் ஷர்மிளா, இயக்குநர்கள், கல்லூரி முதல்வர் ரஜபுதீன, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் மாரியம்மாள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்திருந்தனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!