17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம்….

கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம்….

எழுதியவர்: ஆசிரியர் August 15, 2023, 8:59 pm

இராமநாதபுரம், ஆக.15- சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை 500 பிளாட் கிளை, இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.


மாவட்ட தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவணி செயலாளர் நஸ்ருதீன், கீழக்கரை அனைத்து கிளை தலைவர்கள் கண்மணி சீனி, லாபிர் ஹுசைன், அஸ்லம், பதுரு சமான், ஆரிப், சத்தார் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழக்கரை காவல் ஆய்வாளர் சரவணன் தொடங்கி வைத்து தெரிவித்தார் .10 பெண்கள் உள்பட 38 பேரிடம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை ரத்த வாங்கி மருத்துவகுழுவினர் ரத்தம் சேகரித்தனர். ரத்த தானம் செய்ய வந்த 100க்கும் மேற்பட்டோரின் ரத்த வகையை மட்டும் கண்டறிந்து, அவசர தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளவது என மாவட்ட ரத்த வங்கி குழுவினர் தெரிவித்தனர்.

ரத்த தானம் செய்தோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கீழக்கரை 500 பிளாட் கிளை தலைவர் சுல்தான், செயலாளர் நஸீம் ஃபாய்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!