17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுதந்திர தினத்தை முன்னிட்டு தவ்ஹீத் ஜமாத் சார்பாக ரத்த தானம்….

சுதந்திர தினத்தை முன்னிட்டு தவ்ஹீத் ஜமாத் சார்பாக ரத்த தானம்….

எழுதியவர்: ஆசிரியர் August 13, 2023, 11:07 pm

இராமநாதபுரம், ஆக.13- இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் சார்பில் 7 இடங்களில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பரமக்குடி அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பரமக்குடி கிளை, ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட துணைச்செயலர் உஸ்மான் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவகுழுவினர் 25 பேரிடம் ரத்தம் சேகரித்தனர்.

ரத்த தானம் செய்தோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. புதுமடம் கிளை சார்பில் நடந்த ரத்த தான முகாமிற்கு மாவட்டத்தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமை வகித்தார். உச்சிப்புளி காவல் ஆய்வாளர் மலைச்சாமி துவக்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் கரீம் ஹக் சாஹிப், மாவட்ட துணைச்செயலர்கள் சீனி ரஜப்தீன், மீரான் முன்னிலை வகித்தனர். ரத்த தானம் செய்த  29 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த 2 முகாம்களிலும் 54 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!