இராமநாதபுரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சிவஞானபாண்டியன், தலைமை காவலர்கள் முத்துகிருஷ்ணன், குமாரசாமி, தெய்வேந்திரன் மற்றும் முதுகுளத்தூர் உணவு பொருள் வழங்கல் துறை வட்டாட்சியர் கதிரவன் ஆகியோர் இணைந்து அத்தியாவசிய உணவு பொருட்கள் பதுக்கல் தொடர்பாக இன்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, மட்டியரேந்தல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூடை கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதன்படி அந்த வீட்டில் சோதனை செய்தனர். அங்கு 25 பைகளில் தலா 40 கிலோ வீதம் பதுக்கி வைத்திருந்த ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூடைகளை கைப்பற்றினர். இது தொடர்பாக கடலாடி தாலுகா அ.புனவாசல் ஆண்டி மகன் முத்துராமலிங்கம் (44) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்த 1000 கிலோ ரேஷன் அரிசி மூடைகளை முதுகுளத்தூர் நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
இராமநாதபுரம் பகுதியில் ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது..
எழுதியவர்: ஆசிரியர் August 13, 2023, 7:40 pm

இராமநாதபுரம், ஆக.13 –



You must be logged in to post a comment.