17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்டத்தில் மக்களுடன் இணைந்து தமிழக அமைச்சர் நடைபயிற்சி..

தென்காசி மாவட்டத்தில் மக்களுடன் இணைந்து தமிழக அமைச்சர் நடைபயிற்சி..

எழுதியவர்: ஆசிரியர் August 13, 2023, 7:28 pm

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தென்காசி மேலகரம் பகுதியில் பொது மக்களுடன் இணைந்து நடை பயிற்சி மேற்கொண்டார். தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை தென்காசி வந்தடைந்தார்.

அப்போது பொதுமக்களுடன் இணைந்து மேலகரம் உள்ளிட்ட தென்காசியை சுற்றியுள்ள பகுதிகளில் காலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அமைச்சருடன் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை. இரவிச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வே. ஜெயபாலன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் இணைந்து நடை பயிற்சி மேற்கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!