18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் லோக் அதாலத்: ரூ.2.09 கோடி தீர்வு தொகை அறிவிப்பு..

இராமநாதபுரத்தில் லோக் அதாலத்: ரூ.2.09 கோடி தீர்வு தொகை அறிவிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் August 12, 2023, 5:41 pm

இராமநாதபுரம், ஆக.12- இராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை, ஆகிய நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) இன்று நடந்தது. ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஜி.விஜயா தலைமை வகித்தார். இதில் எடுத்துக்கொண்ட 260 வழக்குகளில் 43 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. ரூ.2.09 தீர்வு தொகையாக அறிவிக்கப்பட்டது. தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.கவிதா, சார்பு நீதிபதி சி.கதிரவன், மாவட்ட உரிமையியல் நீதிபதி எம். நிலவேஸ்வரன், நீதித்துறை நடுவர் (நெ. 2) ஜி.பிரபாகரன்,  கூடுதல் மகிளா மன்ற மாவட்ட நீதிபதி இ.வெர்ஜின் வெஸ்டா, வழக்கறிஞர் சங்க தலைவர் எஸ்.ஜெ.ஷேக் இப்ராஹீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!