17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி…

இராமநாதபுரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி…

எழுதியவர்: ஆசிரியர் August 11, 2023, 9:50 pm

இராமநாதபுரம், ஆக.11 – இராமநாதபுரம் சேதுபதி அரசு கலை கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ஆ.நாகராஜன் தலைமை வகித்தார். தமிழ் துறை தலைவர் மெ.செந்தாமரை வரவேற்றார். கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன், காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை ஆகியோர் தலைமையில்  கல்லூரி மாணாக்கர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

திரை கலைஞர் வி.ராஜேந்திரன் நவீன கோடாங்கி வேடமணிந்து போதை பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மேத்யூ இமானுவேல் குழுவினரின் போதையில் நீ… வீதியில் உன் குடும்பம் எனும் குறுநாடகம், பாரம்பரிய கலையான மல்லர் கம்பம் வீர சாகசம் நடந்தது. வேதியியல் துறை விரிவுரையாளர் உ.து. ராஜம்மாள் நன்றி கூறினார்.  போதைப் பொருள் தீமைகள் குறித்து  விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்திய குழுவினரை  கலெக்டர் விஷ்ணு சந்திரன், எஸ்பி தங்கதுரை ஆகியோர் பாராட்டினர்.  மாவட்ட பிற்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சிவசுப்ரமணியன், காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா, கோட்ட ஆய அலுவலர் செண்பகலதா, தாசில்தார் ஸ்ரீதர், கேணிக்கரை காவல் ஆய்வாளர் ஆடிவேல், என்எஸ்எஸ் திட்ட அலுவலர் சந்திரசேகர், என்சிசி திட்ட அதிகாரி உத்ரசெல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!