18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தென்காசி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15 மதுபானம் விற்பனை நடைபெறாது; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15 மதுபானம் விற்பனை நடைபெறாது; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் August 11, 2023, 11:51 am

Lதென்காசி மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று அனைத்து மதுபானம் விற்பனைகள் ஏதும் நடைபெறாது என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். இது குறித்த மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் சுதந்திர தினம் 15.08.2023 (செவ்வாய் கிழமை) கொண்டாடப்படுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானக்கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் (FLI,FL2,FL3,FL3A, & FLII) மேற்கண்ட தினத்தில் மட்டும் மூடப்பட்டிருக்கும் மற்றும் அன்றைய தினம் மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது என மாவட்ட துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!