17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » 200 கிலோ கடல் அட்டைகளுடன் சிக்கிய இருவர்..

200 கிலோ கடல் அட்டைகளுடன் சிக்கிய இருவர்..

எழுதியவர்: ஆசிரியர் August 10, 2023, 5:29 pm

இராமநாதபுரம், ஆக.10 – இராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர் அறிவுறுத்தல் படி, ராமநாதபுரம் வனவர் ராஜேஷ் குமார், வனக்காப்பாளர்கள் பாலமுருகன், கார்த்திக் ராஜா மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் தேவிபட்டினம் வடக்கு தெரு பகுதியில் இன்று (10/08//2023) ரோந்து பணி மேற்கொண்டனர். அங்கு ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த பதப்படுத்திய நிலையில் 30 கிலோ, உயிருடன் 170 கிலோ கடல் அட்டை, பதப்படுத்த பயன்படுத்திய பாத்திரம், அடுப்பு, காஸ் சிலிண்டர் ஆகியவற்றை கைப்பற்றினர். இது தொடர்பாக தேவிபட்டினம் வடக்கு தெரு சீனி இப்ராகிம் 37, ஷேக் மஸ்தான் 31 ஆகியோரை கைது செய்தனர். கைப்பற்றிய பொருட்களுடன் இருவரையும் இராமநாதபுரம் ஜூடிஷியல் மாஜிஸ்டிரேட் 1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!