17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…

இராமநாதபுரம் மாவட்ட காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் August 8, 2023, 8:44 pm

இராமநாதபுரம்,ஆக.8- இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினரும், ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலருமான கோபால் (எ) பி.ஆர்.என். ராஜாராம் பா‌ண்டிய‌ன் தலைமை வகித்தார். மாநில செயலர் ஆனந்த குமார் முன்னிலை வகித்தார். திருப்புல்லாணி வட்டார இளைஞர் காங். தலைவராக தேர்வான பெரியபட்டினம் இர்ஷாத் அலிக்கு, நியமன கடிதத்தை மாவட்ட இளைஞர் காங்., தலைவர் செங்கை விக்னேஷ்வரன், வழங்கினார்.

ராமநாதபுரம் ஓபிசி அணி மாவட்ட தலைவர் பாஸ்கர சேதுபதி, ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, ராமநாதபுரம், வட்டார தலைவர் காருகுடி சேகர்,  போகலூர்  வட்டார தலைவர் கிருஷ்ணமூர்த்தி, திருப்புல்லாணி கிழ‌க்கு வட்டார சிறுபான்மை தலைவர் பாபுல் ஜின்னா, பெரியபட்டணம் நகர் தலைவர் மைதீன், செம்பி சேகு உள்பட பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியில் புதிய உறுப்பினர்கள் தங்களை இணைத்து கொண்டனர். திருப்புல்லாணி கிழ‌க்கு வட்டார காங்., தலைவர் என்.சேது பா‌ண்டிய‌ன் நன்றி கூறினார்.

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!