17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » ஆரம்பப்பள்ளி, வழிபாட்டு தலம் அருகே டாஸ்மாக் கடை: அகற்றக்கோரி மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் மனு…

ஆரம்பப்பள்ளி, வழிபாட்டு தலம் அருகே டாஸ்மாக் கடை: அகற்றக்கோரி மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் மனு…

எழுதியவர்: ஆசிரியர் August 7, 2023, 5:45 pm

இராமநாதபுரம், ஆக.7 –இராமநாதபுரம் சக்கரக்கோட்டை  ஆரம்பப்பள்ளி மற்றும் வழிபாட்டு தலம் அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் மனு இன்று மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அபிராமம், உரப்புளி, சாயல்குடி, கேணிக்கரை பகுதியில் 2, பிள்ளையார்கோவில், தலைமை அஞ்சல் நிலையம், சக்கரக்கோட்டை முனியய்யா கோயில் டி. பிளாக் உள்பட 8 இடங்களில் இருந்த மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. 

இந்நிலையில்,  சக்கரக்கோட்டை தொடக்கப்பள்ளி, முனியய்யா கோயில், காஸ் சிலிண்டர் கிட்டங்கி அருகே உள்ள டாஸ்மாக் (எண்:6969) கடையை அப்புறப்படுத்துவதற்கு மாற்றாக இதே பகுதியில் செயல்பட்ட டாஸ்மாக் கடை அப்புறப்படுத்தப்பட்டது. டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்த பட்டியல் படி கடையை (எண் 6969) மூடக்கோரி சக்கரக்கோட்டை அப்துல் கலாம் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கடை முன் கடந்த சில நாட்களுக்கு முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இக்கடையை அகற்ற உரிய நடவடிக்கை விரைவில் எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் இன்று நடந்த மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் சக்கரக்கோட்டை அப்துல் கலாம் குடியிருப்போர் நலச்சங்கத்தினர்  கோரிக்கை மனு அளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!