17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டரில் சமூக ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் ..

துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டரில் சமூக ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் ..

எழுதியவர்: ஆசிரியர் January 30, 2018, 3:24 pm
துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டரில் சமூக நல அமைப்பு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈமான் பொது செயலாளர் ஹமீது யாசின், ஈமான் துணை பொது செயலாளர் முஹைதீன் அப்துல்காதர், ஊடகத்துறை செயலாளர் ஹிதாயத்துல்லா, கல்விக்குழு இணை செயலாளர் ஜாபர், செயற்கு குழு உறுப்பினர்கள் நிஜாம்,  காதர் ஆகியோர் கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மேலும் அந்நகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கீழை ஜமீல் , கீழை நீயூஸ் அப்துல் ரஹ்மான், கீழை ஜமால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் அரசு அனுமதியோடு ஈமான் சார்பில் நடைபெற உள்ள சமூக பணிகளில் இணைந்து செயல்படுவது குறித்து கருத்து பறிமாற்றம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் சமுதாய பணிகளில் ஆர்வமுள்ளவர்கள் தன்னார்வலர்களாக கலந்து கொண்டு பணிகள் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது
இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை சமுதாய நலனுக்காக பதிவு செய்த அப்துல் ரஹ்மான் மற்றும் சமீம் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கீழக்கரை ஜமீல் மற்றும் தனியார் நிறுவனத்தின் இயக்குநர் முஹைதீன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக ஊடகத்துறை செயலாளர் ஹிதாயத்துல்லா நன்றி கூறினார்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!