17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் கலைஞர் நூற்றாண்டு விழா தொடர் இலக்கிய கூட்டம்..

நெல்லையில் கலைஞர் நூற்றாண்டு விழா தொடர் இலக்கிய கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் August 7, 2023, 7:47 am

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா தொடர் இலக்கியக் கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் 100 கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் மூன்றாவது இலக்கிய கூட்டம் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமையில் நடைபெற்றது. இதில் கலைஞர் பற்றிய நூல் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கவிஞர் மூக்குப்பேரி தேவதாசன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். கலை பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அருண்பாரதி, புன்னைச் செழியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ‘கலைஞரின் சிறுகதைகள்’ எனும் தலைப்பில் எழுத்தாளர் நாறும்பூநாதன் தனிச் சொற்பொழிவாற்றினார். கவிஞர் முத்துசாமி நன்றி கூறினார். பேராசிரியை பிரியதர்ஷினி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

நூற்றாண்டு விழா கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் கோ. கணபதி சுப்ரமணியன், தமிழ்ச்செம்மல் பாமணி, கவிஞர்கள் ஜெயபாலன், தச்சை மணி, மீனாட்சிபுரம் நூலகர் அகிலன் முத்துக்குமார், எழுத்தாளர் மு.வெ.ரா, புன்னைச் செழியன் புகைப்படக் கலைஞர் துரைராஜ் மற்றும் சண்முக சுப்பிரமணியன், இருளப்பன் கோபாலகிருஷ்ணன், பள்ளித் தாளாளர் ரவிச்சந்திரன், மருத்துவக் கல்லூரி மாணிக்கவாசகம், மேகலிங்கம், வழக்கறிஞர் தீன், காஜாமைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். குலுக்கல் முறையில் இருவருக்கு கலைஞர் பற்றிய நூல் பரிசாக வழங்கப்பட்டது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!