17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » இராமநாதபுரத்தில் குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை முகாம்..

இராமநாதபுரத்தில் குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் August 6, 2023, 7:33 pm

இராமநாதபுரம், ஆக.6 இராம்நாடு ராயல்ஸ் ரோட்டரி சங்கம், சென்னை அப்பலோ குழந்தைகள் மருத்துவமனை சார்பில் குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை முகாம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.  சங்கத்தலைவர் சங்கர் தலைமை வகித்தார். செயலர் நாராயணன் முன்னிலை வகித்தார்.

இதில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை கட்டணமின்றி செய்யப்பட்டது. மேல்சிகிச்சைக்காக 4 குழந்தைகள் பரிந்துரைக்கப்பட்டனர். அப்பலோ மருத்துவமனை டாக்டர்கள் ஹரிதா, விஜய், கார்த்தி ஆகியோர் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

சங்கத்தின் முன்னாள் தலைவரும், இந்திய மருத்துவ கழகத்தின் நிதி செயலர் டாக்டர்.ராசிகா, டாக்டர்.அடிப் அப்துல்லா, செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி பேரா. கார்த்திகேயன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். துணை ஆளுநர் அருண் பிரசாத், முன்னாள் தலைவர்கள் அசாருதீன், தமிழ் செல்வன், சோமசுந்தரம், தமிழ்செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!