18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே திருமங்கலம் பிரதான கால்வாயின் கிளைக் கால்வாய் சிதிலம்.. மண் ஓடையாக காட்சி.. சீரமைக்க கோரிக்கை..

உசிலம்பட்டி அருகே திருமங்கலம் பிரதான கால்வாயின் கிளைக் கால்வாய் சிதிலம்.. மண் ஓடையாக காட்சி.. சீரமைக்க கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் August 6, 2023, 7:30 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமங்கலம் பிரதான கால்வாய்., அனைப்பட்டியிலிருந்து செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விக்கிரமங்கலம், அய்யணார்குளம், குப்பணம்பட்டி வழியாக திருமங்கலம் வரை செல்கிறது., இதில் 10க்கும் மேற்பட்ட கிளைக் கால்வாய்கள் மூலம் நீர் எடுக்கப்பட்டு 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக திறக்கப்பட்டு வருகிறது.,

இந்நிலையில் 4ஆம் நம்பர் கிளைக் கால்வாய் நாட்டாபட்டியில் பிரிந்து வின்னகுடி, வாலாந்தூர், நாட்டாமங்கலம் வழியாக செல்லம்பட்டி, முண்டுவேலன்பட்டி வரை செல்கிறது.,

இந்த கால்வாய் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் நிலையில் அமைந்துள்ளது., சிமெண்ட் கால்வாயாக உள்ள இந்த கிளைக் கால்வாய் சிதிலமடைந்து மண் ஓடையாக மாறி காணப்படுகிறது.

பெரும்பாலான பகுதிகளில் விரிசல்களும், முட்புதர்களும் அடர்ந்து காணப்படும் இந்த கால்வாயை வரும் மழைக்காலத்திற்குள் சீரமைத்து கடைமடை பாசன பகுதி வரை நீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!