17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » விவசாயபோராட்ட களத்தில் மரபு நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கிய விவசாயசங்கத்தினர்..

விவசாயபோராட்ட களத்தில் மரபு நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கிய விவசாயசங்கத்தினர்..

எழுதியவர்: ஆசிரியர் August 6, 2023, 7:25 pm

உசிலம்பட்டி அருகே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தின் 33வது நாளான இன்று மரபு நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய கோரியும், கரும்பு மற்றும் நெல்லுக்கு உரிய விலை வழங்க கோரியும், விவசாய நிலங்களுக்குள் வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும், முல்லை பெரியாற்றில் 152 அடி நீர் தேக்கி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 16 மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்., தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,இன்று 33வது நாளாக நடைபெறும் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமங்கலம் விலக்கு பகுதியில் விவசாய சங்கத்தினர் தமிழர்கள் இழந்த நெல் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்ச்சியாக பாரம்பரிய நெல் விதைகளான தூயமல்லி தங்கசம்பா மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட மரபு நெல் விதைகளை வந்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேட்டி- ஈசன் விவசாய சங்க நிறுவனத்தலைவர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!