18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை மக்களுக்கு கிலி தரும் நாய்கள் விவகாரம்: நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆக.11 ல் ஆர்ப்பாட்டம்::

கீழக்கரை மக்களுக்கு கிலி தரும் நாய்கள் விவகாரம்: நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆக.11 ல் ஆர்ப்பாட்டம்::

எழுதியவர்: ஆசிரியர் August 5, 2023, 10:40 pm

இராமநாதபுரம், ஆக. 5- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் நாய்களால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி, நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன் ஆக. 11ல் தெற்கு தெரு ஜமாத் சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மின் ஹாஜ் பள்ளி ஜமாத் சார்பிலும் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் தொழுகையில் பங்கேற்போர் போராட்டத்தில் கலந்து கொள்ளும் நிலை ஏற்பட்டால் பெரும் போராட்டமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. கீழக்கரை நகரில் சுற்றி திரியும் நாய்களால் நிலவும் பிரச்னையை  ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் பார்வையிட்டு, நாய்களால் ஏற்பட்டுள்ள அச்சம் விலக நாய்களை அப்புறப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!