இராமநாதபுரம், ஆக.5- இராமநாதபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தை ரூ.20 கோடி மதிப்பில் நவீனமயமாக கட்டும் பணியை கலெக்டர் விஷ்ணு சந்திரன், காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம் எல்ஏ ஆகியோர் ஆக.3ல் பூமி பூஜையுடன் துவங்கி வைத்தனர். இப்பணியை பயணிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு ஏற்படாத வகையில் நடைபெறுவதற்கான வசதிகள் குறித்து ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், நகராட்சி நிர்வாக கண்காணிப்பு பொறியாளர் முருகேசன், நகராட்சி நிர்வாக மண்டல பொறியாளர் மனோகரன், நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் விரிவாக்கப் பணி: நகராட்சி நிர்வாக பொறியாளர்கள் ஆய்வு..
எழுதியவர்: ஆசிரியர் August 5, 2023, 8:53 pm




You must be logged in to post a comment.