18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » வடகரையில் எஸ்டிபிஐ கட்சி பொதுக்கூட்டம்; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

வடகரையில் எஸ்டிபிஐ கட்சி பொதுக்கூட்டம்; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

எழுதியவர்: ஆசிரியர் August 5, 2023, 9:33 am

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள வடகரை பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகரத் செயலாளர் ஷாஜித் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் துவக்கமாக நகரத் துணை செயலாளர் சேக் முகம்மது அலி அனைவரையும் வரவேற்றார். நகரத் தலைவர் அப்துல் பாசித் துவக்க உரை நிகழ்த்தினார்.

 

பொதுக்கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநிலப் பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், வர்த்தக அணியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜாபர் அலி உஸ்மானி , மண்டல தலைவர் சுல்பிகர் ஆகியோர் உரையாற்றினா். நகர நிர்வாகிகள் முன்னிலை வகிக்க மாவட்ட தலைவர் சிக்கந்தர் உட்பட மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நோட், பேக் மற்றும் கல்வி உபகரணங்கள், யூனிபார்ம், கண் கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நகர துணைத் தலைவர் காஜா செரீப் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!