ராமநாதபுரம், ஆக.5- மத்திய சமூக நீதி துறை அமைச்சர் வீரேந்திர குமாரிடம் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அளித்த கோரிக்கை மனு: ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள், உதவி வழங்குதல், மருத்துவ உபகரணங்கள் பொருத்துவதற்கான உதவித் திட்டம் (ADIP திட்டம்), வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் நலன் கருதி ராமநாதபுரம் மாவட்டத்தை ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தை நடைமுறைப்படுத்த பரிந்துரைக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பாக முகாம்களை நடத்தி, பயனாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர், முருகன்மத்திய அமைச்சரிடம் நவாஸ் கனி எம்பி கோரிக்கை மனு
எழுதியவர்: ஆசிரியர் August 5, 2023, 7:13 am




You must be logged in to post a comment.