17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய பாதுகாப்பு பணியகம் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி விழா   நடைபெற்றது…

மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய பாதுகாப்பு பணியகம் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி விழா   நடைபெற்றது…

எழுதியவர்: ஆசிரியர் August 5, 2023, 7:10 am
மதுரை விமான நிலையத்தில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு பணியகம் சார்பில்  பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கலாச்சார வார விழா நடை பெற்றது. இதன் பகுதியாக இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மதுரை விமான நிலைய(பொறுப்பு) இயக்குநர் பாஸ்கரன் பேரணியை துவக்கி வைத்தார். விமான நிலைய பாதுகாப்பு முதன்மை அதிகாரி கணேசன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன். மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ,.விமான நிலைய ஊழியர்கள், இன்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா , குடியேற்றத்துறை அதிகாரிகள் ,ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன அலுவலர்கள் இரு சக்கர விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.
இதில் விமான நிலைய பாதுகாப்பு மற்றும் பயணிகளை வழிநடத்தும் விதிகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பேரணியில் பங்கேற்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!