18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக நாய் கடி அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம்..

கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக நாய் கடி அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம்..

எழுதியவர்: ஆசிரியர் August 5, 2023, 6:33 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வெறி நாய்களின் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு ஒரு தீர்வு இல்லாத நிரந்தர பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் பல சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் நாய் கடிக்கு ஆளாகியுள்ளனர்.

இது தொடர்பாக பொதுமக்களும் பல் வேறு அமைப்புகளுடன் இணைந்து போராட்டமும் நடத்தினர். இந்நிலையில் நாய் கடிக்கு ஆளானால் எந்த மாதிரயான உடனடி மருத்துவம் செய்ய வேண்டும் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு NASA சார்பாக 04/08/2023 அன்று ஆம்புலன்ஸ் மூலமாக பொதுமக்கள் மத்தியில் ஒலி பெருக்கி மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு பங்களித்தனர்.

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!