17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே : மாவட்ட ஆட்சியரை கண்டித்து விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் 58 கிராம கால்வாய் தொட்டி பாலம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

உசிலம்பட்டி அருகே : மாவட்ட ஆட்சியரை கண்டித்து விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் 58 கிராம கால்வாய் தொட்டி பாலம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

எழுதியவர்: ஆசிரியர் August 4, 2023, 6:45 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாயிகளின் வாழ்வாதாரமாக கருதப்படும் 58 கிராமதொட்டி பாலம் உசிலம்பட்டி அருகே உ.வாடிப்பட்டி பகுதியில் அமைந்துள்ளது.இந்த தொட்டிப்பாலத்தின் அருகே கல்குவாரி அமைத்து தினமும் வெடி வெடிப்பதால் 58 கிராம தொட்டி பாலம் விரிசலில் ஈடுபட்டு உடைந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் தெரிவித்து வந்த நிலையில் இன்று தொட்டி பாலம் முன் அமர்ந்து தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கல்குவாரிக்கு அனுமதி வழங்கிய மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும் கலகுவாரி அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!