18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்தில் வந்த ரோடு ரோலர் வாகன டிரைவர் மாரடைப்பால் மரணம்.போலிசார் விசாரணை…

உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்தில் வந்த ரோடு ரோலர் வாகன டிரைவர் மாரடைப்பால் மரணம்.போலிசார் விசாரணை…

எழுதியவர்: ஆசிரியர் August 4, 2023, 12:05 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் காசிமாயன் மகன் அலெக்ஸ்(28).இவர் ரோடு ரோலர் வாகனத்தின் டிரைவராக உள்ளார்.தற்போது தேனியில் வேலை பார்த்து வருகின்றார்.நேற்று இரவு வழக்கம் போல் பணி முடித்து விட்டு தனியார் பேருந்தில் உசிலம்பட்டிக்கு திரும்பியுள்ளார். உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டி அருகே வரும் போது அலெக்ஸ் அருகிலிருந்தவரிடம் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார்.அவர் டிரைவரிடம் தகவல் தெரிவிக்க பேருந்து டிரைவர் உடனடியாக பேருந்தை உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனார்.இது குறித்து உசிலம்பட்டி நகர் காவல்நிலையப் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.ஓடும் பேருந்தில் மாரடைப்பால் மரணமானது அவர் கிராமத்தில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!