17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புளியங்குடி இஸ்லாமிய கல்லூரியில் பட்டமளிப்பு விழா மற்றும் அறிவியல் கண்காட்சி..

புளியங்குடி இஸ்லாமிய கல்லூரியில் பட்டமளிப்பு விழா மற்றும் அறிவியல் கண்காட்சி..

எழுதியவர்: mohan May 31, 2022, 9:52 am

புளியங்குடியில் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் (தமுமுக டிரஸ்ட்) சார்பாக இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) இஸ்லாமியக் கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்ச்சி நடந்தது. தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் (தமுமுக டிரஸ்ட்) சார்பாக நடத்தப்படும் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) இஸ்லாமியக் கல்லூரியின் ஆலிமா தைமிய்யா, BA Islamic studies பட்டமளிப்பு மற்றும் Diploma in islamic பட்டமளிப்பு நிகழ்ச்சி மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜமாத் தலைவர் எம்.எஸ்.அப்துர் ரஹ்மான் தலைமையில் கல்லூரி தாளாளர் காஜா முகைதீன், கல்லூரி முதல்வர் மௌலவி உவைஸ் மதனி, அரபு துறை பேராசிரியர் மௌலவி மஜித் பைஜி மற்றும் ஆசிரியர்கள், நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. தமுமுக தலைவர் பேரா. முனைவர். எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ., ஜம்மியத்துல் அஹ்லே ஹதீஸ் தலைவர் ஷேய்ஹ். அனீஸுர் ரஹ்மான் ஆஸமி உமரி மதனி, மஸ்ஜிதுந் நபவி முன்னாள் முதர்ரிஸ் ஷேய்ஹ். முனைவர் அப்துல் கனி மதனி, இஸ்லாமிய அகீதா துறை அறிஞர் ஷேய்ஹ். இம்ரான் மதனி, மூத்த மார்க்க அறிஞர் ஷேய்ஹ். கே.எஸ்.ரஹ்மத்துல்லா இம்தாதி ஆகியோர் சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்கள். சிறப்பு அழைப்பாளராக வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தி.சதன்திருமலைக்குமார், தமுமுக மாநில செயலாளர் எஸ்.மைதீன் சேட் கான், தமுமுக மாவட்ட தலைவர் எம்.முகம்மது யாக்கப், புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சௌந்தரபாண்டியன் ஆகியோர் மற்றும் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள், ஆண்கள், பெண்கள், கல்லூரி மாணவிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) இஸ்லாமியக் கல்லூரி மாணவியர்களின் இஸ்லாமிய அறிவியல் கண்காட்சி மஸ்ஜிதுர் ரஹ்மான் செயலாளர் ஏ.அப்துல் மஜித் தலைமையில் சனிக்கிழமை நடந்தது. கண்காட்சி அரங்கத்தை புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சௌந்தரபாண்டியன் திறந்து வைத்தார். காயிதே மில்லத் துவக்கப்பள்ளியில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் எம்.சாகுல் ஹமீது, கல்லூரி பேராசிரியர் மௌலவி. மஜித் பைஜி மற்றும் ஆசிரியர்கள் ஜெய்லானி ஆலிமா, செய்யது அலி பாத்திமா ஹாதியா, ரஷிதா பானு, ஹாபிரா, நூர்ஜஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் தலைவர் எம்.எஸ்.அப்துர் ரஹ்மான், இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) இஸ்லாமிய கல்லூரி தாளாளர் பி.என்.எம்.எஸ்.காஜா முகைதீன், மதரஸா பொறுப்பாளர் ஏ.பஷீர் ஒலி, மஸ்ஜிதுர் ரஹ்மான் துணைத்தலைவர் ஆட்டோ மைதீன், செயற்குழு உறுப்பினர் எம்.சாகுல் ஹமீது, தமுமுக நகரச் செயலாளர் சமதானியா சாகுல், மமக நகர செயலாளர் மட்டன் செய்யது, புளியங்குடி மமக நகர்மன்ற உறுப்பினர் ரி.அப்துல் காதர், ஊடக அணி தென் மண்டலச் செயலாளர் எம்.எஸ்.ஹமீது, இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் எஸ்.சாகுல் ஹமீது, அட்மின் சுலைமான் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!