18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி எஸ்டிபிஐ கூட்டத்தில் தீர்மானம்..

தென்காசியில் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி எஸ்டிபிஐ கூட்டத்தில் தீர்மானம்..

எழுதியவர்: mohan May 30, 2022, 9:26 am

பொது மக்களுக்கு இடையூறாக உள்ள தென்காசி புதிய பேருந்து நிலையம் டாஸ்மாக் கடையை அகற்றிட வலியுறுத்தி அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க எஸ்டிபிஐ கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எஸ்டிபிஐ கட்சியின் தென்காசி நகர கூட்டம் சனிக்கிழமை நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி நகர தலைவர் சீனா சேனா சர்தார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சேக் ஜிந்தா மதார் வரவேற்றார். கூட்டத்தில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், தென்காசி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும், வார்டுகளில் குடி தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும், பொது மக்களுக்கு இடையூறாக உள்ள தென்காசி புதிய பேருந்து நிலையம் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட மக்களின் முக்கிய கோரிக்கைகளை தென்காசி மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையாளர், அரசு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. வார்டு வாரியாக புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்திடவும் முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் நகர நிர்வாகிகள், நகர துணை செயலாளர் பீர் முகம்மது, பொருளாளார் சுல்தான், நகர செயற்குழு உறுப்பினர்கள் சலீம், பாதுஷா மற்றும் மசூது அலி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் புதிய நகர துணை தலைவர் மாஸ் காஜா நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!