17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் தலை நசுங்கி பலி

மதுரையில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் தலை நசுங்கி பலி

எழுதியவர்: mohan May 29, 2022, 11:20 am

மதுரை பொன்மேனி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் என்கிற வாலிபர் இன்று காலை9.30 மணி அளவில் சம்பட்டி புறத்தில் இருந்து காளவாசல் பைபாஸ் பகுதியில் உள்ள சந்திப்புக்கு வந்து கொண்டிருந்தபோது அவரது பக்கவாட்டில் வந்த லாரியின் முன் பக்கத்தில் எதிர்பாராதவிதமாக மோதியதால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் பின் சக்கரம் வாலிபரின் தலையில் ஏறியதால் வாலிபரின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்தியதாக லாரி ஓட்டுநர் பிரபு என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!