மதுரையிலிருந்து போடி வரை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்து இரயில் இயக்கப்பட்டு வந்தது.கடந்த 2010ம் ஆண்டு மீட்டர் கேஜ்; பாதை அகலரயில் பாதையாக மாற்றப்பட்டு தேனி வரை ரூ506 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று முடிந்து பாரதப்பிரதமர் நரேந்திர மோடி
சென்னையிலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். சுமார் 12 வருடங்களுக்குப்பின் மதுரையிலிருந்து உசிலம்பட்டி வந்தடைந்த இரயிலில் பொதுமக்கள் ஆர்வமுடன் பயணம் செய்து வருகின்றனர்.உசிலம்பட்டியிலிருந்து சுமார் 50க்கும் மேற்ப்பட்ட பயணிகள் தேனி வரை பயணம் செய்தனர்.உசிலம்பட்டியிலிருந்து முதல் பயணம் என்பதால் இரயிலில் பயணம் செய்பவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
12 வருடங்களுக்குப்பின் உசிலம்பட்டி வந்த இரயிலில் தங்கள் முதல் பயணத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் பயணித்து வருகின்றனர்.
எழுதியவர்: mohan May 27, 2022, 1:49 pm




You must be logged in to post a comment.