18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குற்றாலம் அருவிகளில் பாதுகாப்பு நடவடிக்கை; மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு..

குற்றாலம் அருவிகளில் பாதுகாப்பு நடவடிக்கை; மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு..

எழுதியவர்: mohan May 26, 2022, 12:41 pm

குற்றாலம் அருவிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி கிருஷ்ணராஜ் IPS நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு குறித்த முக்கிய அறிவுரைகளை வழங்கினார். குற்றாலம் அருவிகளில் தற்போது சீசன் துவங்கியுள்ளதால் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் வந்து செல்வதற்கும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிப்பதற்கும் மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்று வருவதற்கும், தேவையான நடவடிக்கைகள் தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS குற்றாலத்தில் உள்ள அருவிகளில் அதிகாரிகளுடன் 25.05.2022 அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், போக்குவரத்து, பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவுரைகள் வழங்கினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!