17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் அதிகாரிகளைக் கண்டித்து பூ வியாபாரிகள் பூக்களை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு .

உசிலம்பட்டியில் அதிகாரிகளைக் கண்டித்து பூ வியாபாரிகள் பூக்களை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு .

எழுதியவர்: mohan May 26, 2022, 10:11 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தைத் திடல் பகுதியில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது.இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்ப்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.இக்கடைகள் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமானதாகும்.இப்பகுதியிலுள்ள கடைகளை அளவீடு செய்து மறுடெண்டர் (வாடகைக்கு) விட ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.இந்நிலையில் பூமார்க்கெட் பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை வசதி சாக்கடை வசதி செய்து கொடுக்க கடை ஒன்றிற்கு தலா ரூ30 ஆயிரம் வீதம் இலஞ்சம் கேட்பதாகவும் இதனைக் கண்டித்தும் கடை மறுவாடகைக்கு விடுவதைக் கண்டித்தும் பூவியாபாரிகள் பூக்களை தேனி ரோட்டில் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்த போலிசார் பூ வியாபாரிகளிடம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போகச் செய்தனர்.இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!