17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை கற்பக விநாயகர் நகர் பிரதான தெரு பகுதியில் டிரான்ஸ்பார்மர் அருகில் அகற்ற படாமல் உள்ள கருவேல முட்கள்.

மதுரை கற்பக விநாயகர் நகர் பிரதான தெரு பகுதியில் டிரான்ஸ்பார்மர் அருகில் அகற்ற படாமல் உள்ள கருவேல முட்கள்.

எழுதியவர்: mohan May 23, 2022, 3:34 pm

மதுரை மாவட்டம் 69 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான கற்பக விநாயகர் நகர் பிரதான தெரு பகுதியில் கடந்த வாரம் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கருவேல மரங்களை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வெட்டி சுத்தம் செய்தனர் அதனைத்தொடர்ந்து வெட்டிய கருவேல மரங்களை போக்குவரத்து உள்ள அதே பகுதியில் மலைபோல் மின்சார டிரான்ஸ்பார்மர் அருகில் குவித்து வைத்து விட்டு சென்றுவிட்டனர் டிரான்ஸ்பார்மரில் இருந்து ஒரு சிறு தீப்பொறி ஏற்பட்டால் தீப்பற்றக் கூடிய அபாயம் உள்ளது இந்த பகுதியானது தற்போது ஒரு புதர் போல் காட்சியளிக்கிறது மேலும் கனரக வாகனங்கள் எதிரே வரும்போது வாகனங்கள் ஒதுங்கிச் செல்ல வழியின்றி சிரமப்பட்டு வருகின்றனர் மற்றும் காற்று பலமாக வீசும் சமயங்களில் கருவேல முட்கள் காற்றில் பறந்து ரோட்டில் விழுகின்றன இதனால் அப்பகுதியில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் பஞ்சராகி விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது இது சம்பந்தமாக 69 வது வார்டுக்கு உட்பட்ட மாநகராட்சி சுகாதார அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் 10 நாட்களுக்கும் மேலாக கருவேல முட்கள் அகற்றப்படாமல் உள்ளது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!