17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதியோருக்கு உணவு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.

முதியோருக்கு உணவு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.

எழுதியவர்: mohan May 23, 2022, 3:29 pm

 மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் விளாச்சேரியில் நேத்ராவதி முதியோர் பராமரிப்பு மையத்தில் உணவு வழங்கப்பட்டது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் தனது தனிப்பட்ட சேமிப்பு மூலமாக உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.முதியோர்கள் உணவை அன்போடு ஏற்றுக்கொண்டு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சேவைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.அங்குள்ள முதியோர்களுக்கு மருத்துவம் சார்ந்த பராமரிப்பு சேவைகளை சிறப்பாக செய்து வரும் அந்த மையத்தின் பணியாளர்களை வாழ்த்தி நிறுவனர் மருத்துவர் பாலகுருசாமியிடம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில்குமார், மக்கள் தொண்டன் அசோக்குமார், உதவும் உள்ளம் பெரியதுரை ஆகியோர் கலந்துகொண்டனர்.உணவு வழங்கிய வழிகாட்டி மணிகண்டன் மற்றும் குழுவினருக்கு மையத்தின் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!