18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்ற 343 மாணவ-மாணவிகள்.

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்ற 343 மாணவ-மாணவிகள்.

எழுதியவர்: mohan May 23, 2022, 10:12 am

வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தைபெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் அருளரசு தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை பேராசிரியர் சுப்பிரமணி வரவேற்றார். கல்லூரி முதன்மை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் கலைவாசன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்திவைத்தார். சிறப்பு விருந்தினராக சென்னை ரானேஇஞ்சின் வேல்வி லிமிடெட் நிறுவனத் தலைவர் முரளி கே.ராஜகோபாலன் கலந்துகொண்டு இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் மாணவ-மாணவியர்கள் 343 பேர்களுக்கு பட்டம் வழங்கினார்.விழாவில் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ஸ்ரீராம்பாபு, டாக்டர் ராகீலா, டாக்டர் பிரவீன்ராஜ், பேராசிரியர் முரளிதர், டாக்டர் முருகவேல், பேராசிரியர் பியூலா சுகந்தி, பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள், தாய், தந்தைகள் மற்றும் போரசிரியர்கள், தொழிற்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!