வேலூர் ஊரீசு கல்லூரியில் நேற்று 37 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கல்லூரி செயலாளர் ஷர்மா நித்தியானந்தம் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் நெல்சன் விமலநாதன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஸ்ரீதரன் கலந்துகொண்டு முதுகலை மற்றும் இளங்கலை மாணவ-மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.விழாவில் நிதியாளர் காலெப் நோபல் சுந்தர், துணை முதல்வர்கள் அன்னி கமலா, ரஸ்ஸெல் பிரேம்குமார், விழா ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அன்பழகன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ – மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வேலூர் ஊரீசு கல்லூரியில் 37 -வது பட்டமளிப்பு விழா.
எழுதியவர்: mohan May 20, 2022, 5:26 pm




You must be logged in to post a comment.