18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » எஸ்.டி.பி.ஐ மதுரை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்.

எஸ்.டி.பி.ஐ மதுரை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்.

எழுதியவர்: mohan May 20, 2022, 5:13 pm

மதுரை(வ) மாவட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமை ஏற்றார் செயற்குழு உறுப்பினர் செந்தில், வரவேற்றார் பொதுச் செயலாளர் ஜியாவுதீன், செயற்குழு உறுப்பினர்கள் சிக்கந்தர், இம்தியாஸ் அஹமது, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் வர்த்தக அணியின் மாவட்ட தலைவர் ரம்ஜான், வடக்கு தொகுதி தலைவர் ரபீக் ராஜா, கிழக்கு தொகுதி செயலாளர் சிக்கந்தர், விம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிஜா இப்றாகீம், ஆகியோர் கலந்து கொண்டனர்மதுரை ஏ.வி.மேம்பாலத்தின் ரோட்டோர விளக்குகள் சரிவர எரிவதில்லை மேலும் 35ஆண்டுகளுக்கு மேலாக உள்ள தூண்களாக உள்ளன அதிகமாக பழுதாகி உள்ள தூண்களாக இருக்கிறது பாதசாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வயர்கள் தொங்கிக் கொண்டு உள்ளன பாலத்தில் சாலை போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் இருட்டாக காணப்பட்டு வருகிறது குறைவான மின் விளக்குகள் மற்றும் தூண்கள் உள்ளன சம்பந்தப்பட்ட மதுரை மாநகராட்சி நிர்வாகம் அதிகமான புதிய தூண்கள் அமைத்து மின் விளக்குகள் பொருத்த வேண்டும்என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுபேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது வரவேற்கத்தக்கது ஒன்றிய அரசுக்கும் ஆளுநருக்கும் சம்மட்டி அடி எஞ்சியுள்ள ஆறு பேரின் விடுதலை உட்பட தமிழக சிறைகளில் உள்ள இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளையும் விடுவிக்க வேண்டும் என கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டன. இறுதியாக மாவட்ட பொருளாளர் ரகுமான் கான் நன்றியுரை நிகழ்த்தினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!