18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை- பொதுமக்கள் மீது கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்து சிறையிலடைப்பு.

மதுரை- பொதுமக்கள் மீது கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்து சிறையிலடைப்பு.

எழுதியவர்: mohan May 20, 2022, 5:04 pm

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள கைத்தறி நகர் பகுதியில் நேற்று மாலை இளைஞர்கள் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் புகுந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஈடுபட்டதுடன் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்தனர். இதை அப்பகுதி பொதுமக்கள் வீடியோ எடுத்தனர்., தொடர்ந்து., பெண்கள் ஏன் செய்தது என்று கேள்வி கேட்டதற்கு அவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டினார் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.அதனைத் தொடர்ந்து., அவர்களை ஆஸ்டின்ப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில்., அவர்கள் நிலையூர் AD காலனியைச் சேர்ந்த 22 வயதான வினித் மற்றும் காளி என்பது தெரியவந்தது. மேலும்., ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இளைஞர்களின் ஒருவரான காளியின் மச்சான் ராஜா என்பவர் மீது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வழக்கு கொடுத்ததின் பேரில் அவரை போலீசார் பிடித்து சிறையில் அடுத்ததாகவும்., இதனால் அப்பகுதி மக்களை மிரட்ட வேண்டும் என்பதற்காக தாங்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து., ஆயுதங்களுடன் பொது இடங்களில் சுற்றிய இருவர் மீதும் அரசு பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியது., பொது மக்களை அச்சுறுத்தியது., அவர்களது வாகனங்களை சேதப்படுத்திய குற்றத்திற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!