17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » 18 சுஹாதக்கள் ஆண்கள் அரபி பாடகசாலை திறப்பு விழா…

18 சுஹாதக்கள் ஆண்கள் அரபி பாடகசாலை திறப்பு விழா…

எழுதியவர்: ஆசிரியர் May 19, 2022, 1:13 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெரு பகுதியில் புதிய 18 சுஹாதக்கள் ஆண்கள் அரபி மதர்ஷாஎன்னும் பெயரில் சிறுவர்களின் மார்க்க பள்ளி கூடம் 18.05.2022 மாலை 5 மணியளவில் சாலை தெருவில் திறக்கப்பட்டது.

இந்நிகழ்வில்  க. கு அப்துல் ஜப்பார் தலைமை தாங்கினார்கள், V.V.A.சலாஹுத்தீன் ஆலிம்( முதல்வர் அருசியா அரபி கல்லூரி மற்றும் மாவட்ட அரசு காஜி) சிறப்பு விருந்தினராக பங்குபெற்று சிறப்புரை வழங்கினார். மௌலானா மௌலவி அப்துல் ஸலாம் ஆலிம் மற்றும் மௌலானா மௌலவி முஹம்மது மன்சூர் ஆலிம் வாழ்த்துரை வழங்கினார்கள், மௌலானா மௌலவி ஹுசைன் அலி கிராத் ஓதி, மௌலானா மௌலவி முஹம்மது ஆரிஃப் ஆலிம் ஆகியோர் துஆ ஓதி நிறைவு செய்தார்கள்.

ஜாஹிர் ஹுசைன் (தலைவர் 18 வாலிபர்கள் கல்வி மற்றும் நல அறக்கட்டளை) வரவேற்புரை மற்றும் தொகுப்புரை வழங்கி சீனி முகம்மது தம்பி (பொருளாளர் 18 வாலிபர்கள் கல்வி மற்றும் நல அறக்கட்டளை) நன்றிவுரை வழங்கினார்.

முதல் நாள் அன்று சுமார் 30 பிள்ளைகள் சேர்ந்து தன் ஆரம்ப பாடங்களை துவங்கினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!