17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டை பகுதியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது..

சுரண்டை பகுதியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது..

எழுதியவர்: mohan May 18, 2022, 2:25 pm

சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிதடி, கொள்ளை மற்றும் அரிவாளை காட்டி பணம் பறித்தல் போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த கார்த்திக் என்ற நபரை தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அறிவுறுத்தியதின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 17.05.2022 அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் சுரேஷ் சமர்பித்தார். மேலும் சுரண்டை, சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த ராமசாமி என்ற நபர் மீது சார்பு ஆய்வாளர் வேல்சாமி வழக்கு பதிவு செய்து கைது செய்தார். இதே போல் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த செல்லையா என்ற நபரை சார்பு ஆய்வாளர் ஜெயராஜ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 35 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!