துறையூர் மே 12: துறையூர் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் கணிதத் துறை (சுயநிதிப்பிரிவு) சார்பில் கருத்தரங்கு கூட்டம் (12/05/2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணிதத்துறை பேராசிரியர் முனைவர் P.S.ஸ்ரீனிவாசன் அவர்கள் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் எண்களின் அமைப்பு மற்றும் கணிதத்தேற்றங்கள் உருவான விதம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.மேலும் இயற்கணித எண்களின் கோட்பாடுகள் உருவான விதம் பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார்.இந்நிகழ்வின் தொடக்கத்தில் கணிதத் துறை தலைவர் திருமதி P.பாக்கியலெட்சுமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் திரு. பொன். A.R பெரியசாமி அவர்கள் துவக்க உரை வழங்கி சிறப்பித்தார். கல்லூரியின் செயலர் பொன். இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையுரை வழங்கி பெருமைசேர்த்தார். அதனைத்தொடர்ந்து சுயநிதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் திரு M.மீனாட்சிசுந்தரம் அவர்கள் வாழ்த்துறை வழங்கி சிறப்பித்தார்.இந்நிகழ்ச்சியின் நிறைவுவிழா மதியம் 3.30 மணி அளவில் தொடங்கப்பட்டது. நிறைவுவிழாவில் கல்லூரியின் தலைவர் திரு பொன். பாலசுப்ரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கணிதத்துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினார்.இந்நிகழ்வின் முடிவில் கணிதத்துறை பேராசிரியர் C.ஹேமலதா அவர்கள் நன்றியுரை வழங்கி பெருமை சேர்த்தார். இக்கருத்தரங்கு கூட்டத்தை கணிதத் துறையின் தலைவி, பேராசிரியை P.பாக்கியலெட்சுமி அவர்கள் ஏற்பாடு செய்தார்.தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
புத்தனாம்பட்டி கல்லூரியில்,கணிதத் துறை சார்பில் கருத்தரங்கு கூட்டம் .
எழுதியவர்: mohan May 17, 2022, 10:00 am




You must be logged in to post a comment.