17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை நகரில் 16-ல் இறைச்சி விற்க தடை.

மதுரை நகரில் 16-ல் இறைச்சி விற்க தடை.

எழுதியவர்: mohan May 15, 2022, 10:54 am

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில்,தமிழக அரசின் அரசாணை (நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்களின் கடிதப்படி,புத்தர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 16.05.2022 (திங்கட்கிழமை) அன்று இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.மேற்கண்ட நாட்களில், ஆடு, மாடு, கோழி, மற்றும் பன்றி போன்ற உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. மேற்கண்ட கடைகளை திறந்து வைக்கவும் கூடாது.மீறி செயல்படுபவர்களின் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன், பொது சுகாதாரப் பிரிவு சட்டம் 1939ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!