18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..

திருப்பரங்குன்றம் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..

எழுதியவர்: mohan May 13, 2022, 1:55 pm

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவின் படியும் அக்கினி நட்சத்திர கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தினால்.திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இலவச நீர் மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வை திருக்கோவில் துணை ஆணையர் செயலாளர் சுரேஷ் அவர்கள் இன்று துவக்கி வைக்க கண்காணிப்பாளர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் பங்கேற்க பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.இன்று முதல் கோடை வெயிலின் தாக்கம் குறையும் வரை இலவச நீர்மோர் திருக்கோயில் நிர்வாகத்தால் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!