17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கண்மாயில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி.

கண்மாயில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி.

எழுதியவர்: mohan May 13, 2022, 1:46 pm

ஆஸ்டின்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கூத்தியார்குண்டு கம்மாயில் நேற்று காலை(12/05/2022) நான்கு சிறுவர்கள் குறித்த சென்றுள்ளார்கள் இதில்மதுரை நெல்லையப்பபுரம் புரத்தைச் சேர்ந்த லிங்க்கப்பன் இவரது மகன் அகிலேஸ்வரன் என்கின்ற அகிலேஷ் வயது 10 இவர் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாள் கோடை விடுமுறை காலம் என்பதால் சிறுவர்கள் நான்கு பேர் இணைந்து கூத்தியார்குண்டு கம்மாயில் குளிக்கச் சென்று உள்ளார்கள் இதில் அகிலேஷ் ஆழமான பகுதிக்கு சென்று நீருக்குள் மூழ்கி உள்ளான் இதைப் பார்த்த மற்ற சிறுவர்கள் பயத்தில் அங்கிருந்து ஓடிவிட்டார்கள் இரவு வரை அவர் வீட்டார்கள் சிறுவனை எங்கு தேடியும் கிடைக்காததால் இவர்களுடன் சென்ற சிறுவர்கள் பிடித்து விசாரித்த போது நாங்கள் கூத்தியார்குண்டு கம்மாயில் குளிக்க சென்றோம் அப்போது ஆழமான பகுதிக்கு சென்று விட்டான் நீரில் மூழ்கி பார்த்து பயந்து போய் ஓடி வந்துவிட்டோம் இதுகுறித்து பெற்றோர் ஆஸ்டின்பட்டி போலீசுக்கு புகார் செய்ததை அடுத்து ஆஸ்டின்பட்டி போலீசார் இன்று காலை மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை டவுன் தீயணைப்பு நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் தேடுதலுக்கு பின் சிறுவனின் உடலை மீட்டனர் பிரேத பரிசோதனைக்காகஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. பெற்றோர்களின் கவனத்திற்கு கோடைவிடுமுறை காலமென்பதால் கம்மாய் பகுதிகளில் குழந்தைகள் செல்லாத வண்ணம் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் மேலும் குழந்தைகளிடம் உரிய அறிவுரை கூறி நீர்நிலைக்கு செல்லக் கூடாது என எச்சரிக்கை செய்ய வேண்டும் என காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் கேட்டுக்கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!