17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் நூலகத்தில் போட்டித் தேர்வு. மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்.

சோழவந்தான் நூலகத்தில் போட்டித் தேர்வு. மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்.

எழுதியவர்: mohan May 12, 2022, 9:55 am

மதுரை மாவட்டம், சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் உள்ள நூலகத்தில் ,உலக புத்தக தினத்தை ஒட்டி போட்டித் தேர்வு மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பேரூராட்சி 8-வது வார்டு கவுன்சிலரும்,எம். வி. எம். கலைவாணி பள்ளி தாளாளருமான, எம். மருதுபாண்டியன் தலைமை வகித்தார். அரசு போட்டித் தேர்வுகளில், பொது நூலகங்களின் பங்கு என்ற தலைப்பில் விவேகானந்தா கல்லூரி, தலைமை நூலகர் பிரபாகரன் சிறப்புரை ஆற்றினார். நூலகர் பாலமுருகன் வரவேற்றார்.நூலகர் ஜெயந்தி நன்றி உரை நிகழ்த்தினார். இதில், போட்டித் தேர்வு மாணவர்கள், நூலக வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!