வத்தலக்குண்டு அருகே தெப்பத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் (44)..இவர் கேரளாவில் முறுக்கு வியாபாரம் செய்து வருகின்றார்.இவர் தனது மனைவியின் சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேச்சியம்மன்கோவில்பட்டிக்கு வந்திருந்த நிலையில் குஞ்சாம்பட்டியைச்
சேர்ந்த ராமன் என்பவரது தோட்டத்தில் குளிக்க சென்ற போது தோட்டத்தில் உள்ள 80 அடி ஆள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அதிகாரிகள் உடலை மீட்டு போலிசாரிடம் ஒப்படைத்தனர். உடலை கைப்பற்றிய உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலிசார் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து ஒருவா் பலி.
எழுதியவர்: mohan May 11, 2022, 11:25 am




You must be logged in to post a comment.