17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

எழுதியவர்: mohan May 11, 2022, 10:31 am

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது..தாசில்தார் பார்த்திபன் தலைமை வகித்தார். துணை தாசில்தார் மாதவன் தேர்தல் தாசில்தார் ராஜேஷ் முன்னிலை வகித்தனர்.விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் கூட்டத்தில் வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் திருப்பரங்குன்றம் வட்டார விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது நீர்வரத்து கால்வாய்கள் அனைத்தும் மணல் மேவி உள்ளதால் கண்மாய்க்கு மழை நீர் வருவது தடைப்படுகிறது.மேலும் தென்பலஞ்சி விவசாய நிலத்திற்குள் செல்லும் மின்சார கம்பி தாழ்வாக செல்வதால் விவசாய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் வந்து செல்ல தடை ஏற்பட்டு உள்ளது. எனவே அதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை அப்புறப்படுத்தவும் கோரிக்கை வைத்தனர்.தாசில்தார் பார்த்திபன் கூறுகையில், ”சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி தீர்வு காணப்படும்”என்றார்.

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!