18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே கிராமத்திற்குள் வழிதவறி வந்த புள்ளிமானை பிடித்து கிராம மக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

உசிலம்பட்டி அருகே கிராமத்திற்குள் வழிதவறி வந்த புள்ளிமானை பிடித்து கிராம மக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

எழுதியவர்: mohan May 10, 2022, 7:18 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது மலைப்பட்டி கிராமம்.இக்கிராமத்தின் அருகிலுள்ள புத்தூர் மலையிலிருந்து இரை தேடி வந்த சுமார் 5வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று வழிதவறி மலைப்பட்டி கிராமத்திற்குள் புகுந்தது.மக்களை பார்த்து மிரண்டு அங்கும் இங்கும் குதித்தோடிய புள்ளிமானை அக்கிராம இளைஞர்கள் பிடித்து கயிற்றால் கட்டி வைத்து விட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகலறிந்த வனத்துறையினர் புள்ளிமானை பார்த்த போது மானின் காலில் காயங்கள் இருந்ததினால் நாய் ஏதும் கடித்ததா அல்லது யாரேனும் துன்புறுத்தினார்களா என விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் மானை மீட்டு சிகிச்சையளித்து பத்திரமாக வனப்பகுதிக்குள் விட்டனர்.கடந்த மாதம் இதே மலையிலிருந்து வழிதவறி ஊருக்குள் வந்த மான் ராமநாதபுரம் கிராமம் அருகே தனியார் பேருந்தில் மோதி பலியானது குறிப்பிடத்தக்கது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!